About Us

புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு

சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும். தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் 1677 என்னும் ஆண்டு பொறிக்கப்பட்ட சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது. (இவர் புனித சவேரியாரிடம் இருந்து கிறுஸ்தவ நம்பிக்கையை பெற்றவராக இருக்கலாம் என எண்ண இடமிருக்கின்றது).பின்னர் அச்சிலுவையை மையமாக வைத்து ஒரு பீடம் அமக்கப்பட்டது.பின்னர் காலப்போக்கில் அதில் ஒரு குருசடி கட்டி , அலங்கார அன்னை குருசடி என பெயரிடப்பட்டனர்.மக்கள் இங்கு செப வழிபாடு செய்துவந்தனர்

கி.பி 1929 வரை இப்பகுதியானது பழம்பெரும் பங்காகிய காரங்காடு, தூய ஞானபிறகாசியார் ஆலயத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்துவந்தது.1929ம் ஆண்டு கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் அர்சிக்கப்பட்ட பின் கண்டன்விளை , காரங்காட்டின் கிளைப்பங்காக செயல்பட்டது.சித்தன்தோப்பு மக்கள் கண்டன்விளை கிளைப்பங்கிற்கு உட்பட்டு செயல்பட்டனர்.


1944-ம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி கண்டன்விளை தனிப்பங்காக மாற்றப்பட்டது.1967 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் நாள் அருட்பணி.சூசைமிக்கேல் அடிகளார் அவர்களால் , அலங்கார அன்னை குருசடியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.அன்றுமுதல் ஞாயிறு மற்றும் பெருவிழா நாட்களில் ஆயர் இல்லத்திலிருந்து வரும் குருக்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.


1968 மே மாதம் முதல் வாரம்தோறும் இரு நாட்கள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.1974 ம் ஆண்டு குருசடி இருந்த இடத்தில் ஆலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1978 ம் ஆண்டு ஜனவரி 2 ம் நாள் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.1997 ம் ஆண்டு ஆலயத்தின் முகப்பு மாற்றப்ப்ட்டு மணிக்கூண்டுடன் கூடிய புதிய முகப்பு கட்டப்பட்டது. 11.07.2015 ல் புதிய ஆலய அடிக்கல் நாட்டப்பட்டு ,03.09.2015 முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. 30.12.2017 அன்று புதிய ஆலயம் அர்சிக்கப்பட்டது புனித அலங்கார அன்னையின் பரிந்துபேசுதலால் சித்தன்தோப்பு இறைசமூகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் நடைபயில்கின்றது